சிறி சித்தி விநாயகர் ஆலயம்    

Sri Siththi Vinayagar Temple kultur verein e.V Nuernberg

பக்தியோடு வரவேற்கின்றது ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்

  • IMG_20250414_194544
  • IMG_20250414_194711
  • IMG_20250414_194555
  • IMG_20250414_194737
  • IMG_20250414_194800

welcome 

இவ்வாலயம் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இலங்கை தமிழ் மக்களால் ஒரு நிருவாக ஒழுங்குடன் பொது ஆலயமாக நுரென்பெர்க் நகரத்தில் ஜெர்மனி நாட்டில் அருள் பாலித்த வண்ணம் திகழ்கின்றது.  எம்  மூலவர் விநாயக பெருமான் அருளுட ன் ராஜ இராஜேஸ்வரி அம்மன் சிவ பெருமான் , முருகப் பெருமான் , பெருமான் ஐயப்பன் , கிருஷ்ண பெருமான் ,காவல் தெய்வம்  வயிரவபெருமானுடன் அருள் பாலித்த வண்ணம் திகழ்ந்து வருகிறது. 

 For over 25 years, this sacred temple has been lovingly maintained by the Sri Lankan Tamil community. Today, it graciously stands as a public place of worship, radiating divine blessings in the city of Nuremberg, Germany. Our presiding deity is the revered Lord Ganesha, who continues to guide and bless all devotees.

 Seit über 25 Jahren wird dieser heilige Tempel liebevoll von der sri-lankischen Tamilen-Gemeinschaft gepflegt. Heute steht er als öffentlicher Ort der Verehrung in der Stadt Nürnberg, Deutschland, und strahlt göttlichen Segen aus. Unsere Hauptgottheit ist der verehrte Lord Ganesha, der weiterhin alle Gläubigen führt und segnet.

 

IMPORTANT ANNOUNCEMENTS முக்கிய அறிக்கை / நிகழ்வுகள்/ இங்கே அழுத்தவும்

 ஆலயம் திறந்திருக்கும் நேரம்    Temple opening hours

தினம் தோறும் மாலை  17:30  - 20:00

Daily 17:30 - 20:00

அருள் பாலிக்கும் ஆலய தெய்வங்கள்


 

இராஜ இராஜேஸ்வரி  அம்மன்

பல சிறந்த யோக தெய்வ வம்சாவளிகளில், ராஜராஜேஸ்வரி முதன்மையானவர். சுயவிருப்பமும் சுதந்திரமும் கொண்ட லலிதா, காமேஸ்வரி ("ஆசையின் ராணி") என்றும் அழைக்கப்படும் ஒரு அற்புதமான புலன் உணர்வுள்ள தெய்வம். அதே நேரத்தில், அவர் தூய உணர்வு கொண்ட பரம கடவுள் சிவனின் முழுமையான அர்ப்பணிப்புள்ள மனைவி. அவர் நிரந்தரமான பரிபூரண இணக்கமான நிலையில், எப்போதும் கருணையுடன், அனைத்து உயிரினங்கள் மீதும் கருணையால் ஈரமான கண்களுடன் இருக்கிறார்.

Of the many great yogic goddess lineages, Rajarajeshwari is preeminent. Self-willed and independent, Lalita is an exquisitely sensuous goddess also known as Kameshvari (“Empress of Desire”). At the same time, she is the completely devoted wife of the Supreme Lord Shiva, who is pure consciousness. She exists in a perpetual state of perfect harmony, ever benevolent, her eyes moist with compassion for all beings.

Lord RAJA RAJESWARI AMMAN


 

சிவலிங்கம் / சிவ பெருமான்

திருமுறைகள் என்பது பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அடியார்களும், இறைவனின் மனதிற்கு உகந்தவர்ககளின் மூலமாக இறைவனே நேரடியாக தந்த சில போதனைகளும் அடக்கம். அவ்வாறு அருளப்பட்டட புராணங்கள் பன்னிரெண்டு திருமுறைகளாகத் தொகுப்பட்டன. அதில் சிவபுராணம் என்பது எட்டாம் திருமுறையாகும். அதில் சிவபெருமானது பெருமை முழுவதுமாக கூறப்பட்டிருக்கிறது.


The Thirumuraigas include some teachings given directly by the Lord Himself through various devotees and groups pleasing to the Lord at various times. Thus, the Puranas were compiled into twelve Thirumurai. The Shiva Purana is the eighth Thirumurai. In it, the glory of Lord Shiva is fully described

Lord SHIVA


 


முருகப் பெருமான்

முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் பழனி மலையில் வசிக்கும் ஆண்டவராகப் போற்றப்படுகிறார். சங்க காலத்தில் குறிஞ்சி நிலப்பகுதியின் தெய்வமாகப் போற்றப்பட்டார்.

Lord Murugan has been a major deity worshipped in the Indian subcontinent since ancient times. He is worshipped mostly by Tamils, hence he is also called the Tamil God. He is also worshipped as the Lord residing in Palani Hill. During the Sangam period, he was worshipped as the deity of the Kurinji region.

Lord muruga



வயிரவப் பெருமான்

சிவனின் ருத்ர ரூபமாக இருப்பவர்; கோயிலின் வடக்கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல்  நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர்.

Er, der die Rudra-Form von Shiva ist; Ein Golam, der auf der Nordostseite eines Shiva-Tempels steht; Er wird in nackter Gestalt ohne Kleidung und mit zwölf Armen als Drache dargestellt, mit dem Mond auf seinem Kopf und den Waffen Streitkolben, Seil der Liebe und Ankusam.

Lord VAYIRAVAR